வார ராசி பலன் (11-04-2021 to 17-04-2021)
மேஷம்

வார ராசிப்பலன்

11-4-2021 முதல் 17-4-2021 வரை

கணித்தவர்: சத்தியபுரி ஜோதிட மாமணி திருஞானம்


புத்திசாலியான மேஷம் ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலை சுமூகமாக இருக்கும். வீண் பயம் உங்களுக்கு மனக் குழப்பம் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்க்கும் இனங்களான அனுகூலமாகும். உறவுகள் மேன்மையாகும். நட்பு வட்டாரம் உதவிகரமாக இருக்கும். தடை விலகும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடினமான சூழ்நிலையாக இருக்கும். விடா முயற்சி தேவை. வியாபாரத்தில் கடின உழைப்பு இருந்தாலும் லாபகரமாக இருக்கும்.

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். போட்டி விளையாட்டுகளில் முன்னேற்றமாக இருக்கும்

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் நெருக்கடி இருக்கும். கால்நடை பராமரிப்பு செலவு இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்பப் பணிகளில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்

நண்பர்களை மதிக்கும் ரிஷபம் ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். உங்கள் செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் கூடும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் நல்ல முன்னேற்றம் பெறும். நண்பர்கள், உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். தேக ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லைகள் வரும். பணவரவு லாபகரமாக இருக்கும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில்ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் லாபகரமாக இருக்கும். பயண அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு இருந்தாலும் லாபம் பெருகும்

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு, போட்டிகள் வெற்றி தரும்.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். நிதி நிலைமை சீராகும். கால்நடை விருத்தி லாபம் தரும். வெளியூர் பயணம் அலைச்சல் மிகுந்திருக்கும்

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சிறு சிறு பிரச்சனைகள் சிரமம் தரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும்.

மிதுனம்

சிந்தித்து செயல்படும் மிதுனம் ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றங்கள் இருக்கும். அரசு விஷயங்கள் அனுகூலமாகும். பணவரவுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும். எதிர்ப்புகள் விலகும். இறையருள் கிட்டும். குழந்தைகள் பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில்ரீதியான முன்னேற்றம் இருக்கும். உற்பத்தி திறன் கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் காரியத்தடை, சிரமம் இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலை, இலக்கியம் முன்னேற்றமாகும்.. விளையாட்டு, போட்டிகளில் முன்னேற்றம் இருக்கும்.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். பராமரிப்பு செலவுகள் இருக்கும். திட்டமிடல் அவசியம் தேவை

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் பொறுப்புகள் கூடும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். சுபச் செலவுகள் இருக்கும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.

கடகம்

உயர்ந்த எண்ணம் கொண்ட கடகம் ராசி அன்பர்களே....

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையாக இருக்கும். தொழில் ரீதியான வருமானம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். தேவைகளுக்கு ஏற்ப பணவரவு இருக்கும். வெளியூர் பயணம் அலைச்சல் இருக்கும். கடன் சுமைகள் குறையும். ஆன்மிக ஈடுபாடு மன நிம்மதி தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளின் மனக்கசப்பு சிரமம் தரும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும்.

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு, போட்டிகளில் முன்னேற்றம் இருக்கும்.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் நெருக்கடி மிகுந்து இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் வரும். கால்நடை பராமரிப்பு செலவுகள் இருக்கும். தன, தானிய விருத்தி சிரம பரிகாரம் ஆகும்.

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. புதிய முயற்சி அனுகூலமாகும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை.

சிம்மம்

விவேகமாக சிந்தித்து செயல்படும் சிம்மம் ராசி அன்பர்களே...

இந்த வாரம் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பப் பொருளாதாரம் மேன்மையாகும். தொழில்ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாகும். எதிர்பார்க்கும் விஷயம் கைகூடும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் அனுசரித்துப் போவது நன்மை. பயண அலைச்சல் மிகுந்திருக்கும். உங்கள் பேச்சு சாதுரியம் காரிய அனுகூலம் தரும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு, அலைச்சல் மிகுந்திருக்கும். நிதி நிலைமை சீராகும்.

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் வீண் பிரச்சனை, காரியத் தடையாகும் கலை, இலக்கியத்தி்ல் விடாமுயற்சி தேவைப்படும். விளையாட்டு, போட்டிகளில் தீவிர கவனம் தேவை.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் கடின உழைப்பு, பயண அலைச்சல், எதிர்பாராத செலவு என சிரமம் இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும்.

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் சிரமம் கூடும். புதிய பொறுப்புகள் கூடும். குடும்பப் பிரச்சனைகளில் கோபத்தை தவிர்ப்பது உத்தமம். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஆகும்.

கவனநாள் : 

ஏப்ரல் ­11,12 ம் தேதி சந்திராஷ்டமம்

கன்னி

சூழ்நிலையை அனுசரித்து போகும் கன்னி ராசி அன்பர்களே...

இந்த வாரம் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாகும். வளர்ப்பு பிராணிகள் மீது அதிக அக்கறை செலுத்துவீர்கள். சுகஜீவனம், கடன்சுமை குறைதல், தேக ஆரோக்கியம் என நற்பலன்கள் இருக்கும். புதிய பொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். சூழ்நிலையை அனுசரிப்பது உத்தமம். கடின உழைப்பு இருக்கும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும். உற்பத்தி திறன் கூடும். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், லாபகரமாக இருக்கும்

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு, போட்டிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கால்நடை, வளர்ப்பு பிராணிகள் விருத்தி லாபம் தரும். பிரயாண அலைச்சல் மிகுந்திருக்கும்.

பெண்களுக்கு: 

குடும்பத்தில் சிரமங்கள் குறையும். எதிர்பாராத வரவுகள், குடும்ப பிரச்சனைகளைத் தீர்க்கும். கடன் சுமை குறையும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். திட்டமிடல் அவசியம் தேவை.

கவனநாள் : 

ஏப்ரல் 12, 1­3, 14ம் தேதி சந்திராஷ்டமம்

துலாம்

நேர்மையான குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே....

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையாக இருக்கும்.. எதிர்பார்க்கும் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கடன் சுமை குறையும். தேக ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லைகள் வரும். குடும்பப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் நன்மை தரும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் லாபகரமான முன்னேற்றம் இருக்கும்

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

 எதிர்பாராத சிரமங்கள் கல்வியில் முன்னேற்றத் தடையாகும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு, போட்டிகளில் முழு ஈடுபாடு தேவை.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். கால்நடை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். எதிர்பாராத பணவரவு நிதி நிலைமையைச் சீராக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகள் அனுகூலமாகும். குடும்பப் பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை.

கவனநாள் : 

ஏப்ரல் ­15, 16, 17ம் தேதி சந்திராஷ்டமம்

 

விருச்சிகம்

எதையும் தாங்கும் இதயம் கொண்ட விருச்சிகம் ராசி அன்பர்களே... 

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். வீடு, மனை போன்ற விஷயங்கள் லாபம் தரும். புதிய பொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். பெரியோர்கள் ஆசி ஆதரவு இருக்கும். நட்பு, உறவுகள் மேம்படும். போக்குவரத்தில் கவனம் தேவை. திட்டமிடல் அவசியம் தேவை.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு, நெருக்கடியாக இருக்கும். உற்பத்தி திறன் கூடும். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும்.

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் சோம்பலான சிந்தனைகள் காரியத் தடையாகும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு, போட்டிகளில் முழு ஈடுபாடு தேவை.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் நெருக்கடி இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். பயணம் அலைச்சல் சிரமம் தரும். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும். தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

கவனநாள் : 

ஏப்ரல் ­17ம் தேதி சந்திராஷ்டமம்

 

தனுசு

மனித நேயம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையாக இருக்கும்.. ஆன்மிக ஈடுபாடு சிரமபரிகாரம் ஆக இருக்கும். பணவரவுகள் உங்கள் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இருக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சற்று கடினமாக இருக்கும்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருந்தாலும், நிதி நிலைமை உயரும். வியாபாரத்தில் போட்டிகள் மிகுந்து இருக்கும். லாபகரமாக இருக்கும்.

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் முன்னேற்றமாக இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும் விளையாட்டு, போட்டிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் பராமரிப்பு செலவினங்கள் வரும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். கால்நடை விருத்தி லாபகரமாக இருக்கும்.

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேக ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். உறவுகள் மேம்படும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

 

 

மகரம்

தன்னம்பிக்கையுடன் செயல்படும் மகரம் ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையாக இருக்கும்.. தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றம் பெறும். எதிர்ப்பு விலகும். பணவரவுகள் சிரமங்களைத் தீர்க்கும் வகையில் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுகபோகம் இருக்கும். எதிர்பார்த்த காரியத்தில் முழு கவனம் செலுத்தி பலன் பெறுவீர்கள்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் முன்னேற்றம், லாபகரமாக இருக்கும்.

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் முன்னேற்றமாக இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும் விளையாட்டு, போட்டிகளில் முன்னேற்றம் இருக்கும்.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். கால்நடை விருத்தி லாபம் தரும்

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகள் சிரமம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவுகள் மேம்படும். சுபகாரிய, ஆன்மிக ஈடுபாடு மனநிறைவு தரும். குடும்பப் பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை.

கும்பம்

பொறுமையுடன் செயல்படும் கும்பம் ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும் . குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். பணவரவுகள் நன்றாக இருக்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். பக்தி மிகுந்து இருக்கும். எதிர்பார்க்கும் ஒரு விஷயம் அனுகூலமாகும், தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலையில் கடின உழைப்பு இருக்கும். விடாமுயற்சி நல்ல பலன் தரும். வியாபாரத்தில் போட்டி, அலைச்சல் மிகுந்திருக்கும். விடாமுயற்சி நற்பலன் தரும்

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் நல்ல முன்னேற்றமாக இருக்கும். கலை, இலக்கியம் முன்னேற்றம் பெறும். விளையாட்டு, போட்டிகளில் முழுஈடுபடு தேவை.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பராமரிப்பு செலவுகள் இருக்கும். கால்நடை விருத்தியாகும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகள் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் சேமிப்பை உயர்த்தும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

மீனம்

சுறு சுறுப்புடன் செயல்படும் மீனம் ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுமாராகவே இருக்கும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஆகும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத செலவுகள் சிரமம் தரும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: 

தொழில் ரீதியான சூழ்நிலையில் கடின உழைப்பு இருக்கும். உற்பத்தி திறன் கூடும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும்.

கல்வியாளர்மாணவர்களுக்கு: 

கல்வியில் ஞாபக மறதி தொல்லை இருக்கும். விடாமுயற்சி நற்பலன் தரும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு, போட்டிகளில் முழுஈடுபடு வெற்றி தரும்.

விவசாயிகளுக்கு: 

விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். பராமரிப்பு, ரிப்பேர் செலவினங்கள் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

பெண்களுக்கு: 

குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். ஆன்மிக ஈடுபாடு மன நிம்மதி தரும்.