மேஷம்

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். இதுவரை இருந்துவந்த உடல் உபாதை நீங்கும். செய்யும் தொழிலில் போட்டிகள் இருந்தாலும் பாராட்டு பெறும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரிஷபம்

இன்று உங்கள் தேக ஆரோக்கியம் கூடும். எதிர்பார்க்கும் விஷயங்கள் அனுகூலமாகும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகளின் அனுசரனை உண்டு. பண வரவு தாராளமாக இருக்கும். உறவுகள் மேம்படும்.. ஆன்மிக .சிந்தனை நன்மை தரும். திட்டமிடல் அவசியம் தேவை.
மிதுனம்

இன்று உங்கள் அத்தியாவசியத் தேவை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயண அலைச்சல் சிரமம் தரும். வாகனப் போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. உறவினர்களிடம் எச்சரிக்கை அவசியம் தேவைப்படும்.
கடகம்

இன்று குடும்ப சூழ்நிலையில் மகிழ்ச்சி மிகுந்திருக்கும். விருந்தினர் வருகையால் இல்லம் சிறக்கும். உங்கள் விடாமுயற்சிக்கு ஏற்ற நற்பலன் கிட்டும். செய்யும் தொழிலில் சிறப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். உங்கள் ஆன்மிகச் சிந்தனை சிரமங்களுக்குப் பரிகாரமாக அமையும்.
சிம்மம்

இன்று உங்கள் முயற்சிகளில் இருந்த தடை விலகும். காரிய அனுகூலமாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாதிச் செலவினங்கள் வரும். பணவரவு உங்கள் தேவைக்கேற்ப இருக்கும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆன்மிக சிந்தனை ஆறுதல் தரும்.
கன்னி

இன்று வெற்றிகரமான உங்கள் செயல்பாடுகள் பாராட்டு பெறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், சுபகாரியம், விருந்து என பரபரப்பாக இருக்கும். புதிய காரியம். இன்று அனுகூலமாகும். ஆன்மிக சிந்தனை நற்பலன் தரும்.
துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணப்புழக்கம் மிகுந்திருக்கும். சுபச் செலவினங்ஸள் உண்டு. எதிர்பார்த்த ஒரு விஷயம் இன்று கைகூடும். பயண அலைச்சல் சிரமம் தரும்.
விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும் நாள். வழக்குகளில் வெற்றி கிட்டும். கடன்சுமை குறையும். பணவரவுகள் உங்கள சிரமங்களை குறைக்கும் வகையில் இருக்கும். உறவுகள் மேம்படும். குடும்பத்தில் சந்தோஷம் மிகுந்திருக்கும். ஆன்மிக சிந்தனை ஆறுதல் தரும்.
தனுசு

இன்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷம் அனுகூலமாகும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினை சிரமம் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திட்டமிட்டு செயல்படுவது சிரமங்களைக் குறைக்கும்.
மகரம்

இன்று தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு சிரமங்களைத் தீர்க்கும். ரிப்பேர் செலவினங்கள் இருக்கும். சுபகாரி முயற்சி முன்னேற்றமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நிதிநிலைமை சீராகும்.
கும்பம்

இன்று தொழில் ரீதியான முன்னேற்றங்கள் மனநிம்மதி தரும். வழக்கு வியாஜ்ஜியங்கள் சாதமாகும். உறவினர்களிடம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குடும்ப விஷயங்கள் சுமுகமாக இருக்கும். பயண காரியம் அனுகூலமாகும்.
மீனம்

இன்று நட்பு வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சுகபோகம் மிகுந்திருக்கும், உறவினர்களின் அனுசரணையான போக்கு மனநிம்மதி தரும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. பயண காரியத்தில் சிரமங்கள் இருக்கும். இறையருள் உங்கள் சிரமங்களுக்குப் பரிகாரமாக இருக்கும்.