ஒலிம்பிக் போட்டிகள் அறிவித்தப்படி நடைபெறும் : டோக்கியோ தகவல்

பதிவு செய்த நாள் : 02 பிப்ரவரி 2021 19:37

டோக்கியோ

ஜப்பானில் அறிவித்தப்படி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்களுக்கான தலைவர் யோஷிரோ மோரி இன்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றால் டோக்கியோ நகரில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் ஜப்பானின் விளையாட்டு ஆராய்ச்சி ஆணையத்துடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்களுக்கான தலைவர் யோஷிரோ மோரி அறிவித்தப்படி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அறிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றை பொருட்படுத்தாமல் ஒலிம்பிக்கை நடத்துவதற்கான புதிய வழிகளை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். விவாதம் எப்படி நடக்கும் என்பதில் அல்ல. எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும். அதற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக யோஷிரோ மோரி தெரிவித்தார்.

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலால் சில பகுதிகளில் அவசரகால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இந்த சூழ்நிலையில் இந்த கோடை மாதம் திட்டமிடப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.