ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தை 100 கோடி டாலருக்கு வாங்க பைஜூஸ் ஒப்பந்தம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 21:01

பெங்களூரு,

பொறியியல், மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் (Byju’s) 100 கோடி டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் கல்வி தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய ஒப்பந்தமான இது அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பைஜுவின் மதிப்பு 1200 கோடி டாலர் ஆகும். தற்போது கொரோனா தொற்று காரணமாக அதன் ஆன்லைன் பாடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து இரு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

புது தில்லியை தளமாகக் கொண்ட ஆகாஷ் கல்வி சேவைகள் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் சவுத்ரி ஆகியோருக்கு மின்னஞ்சல்கள் மற்றும் அழைப்புகள் பதிலளிக்கவில்லை.

பிளாக்ஸ்டோன் குழுமத்தின் ஆதரவுடைய ஆகாஷ் கல்வி சேவைகள் ஆகாஷ் நிறுவனத்தை நடத்துகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் சவுத்ரி ஆவார்.

இந்த நிறுவனம் நாட்டின் மிக பிரபலமான பொறியியல் மற்றும் மருத்துவப் கல்லூரிகளில் நுழைவதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.. ஆகாஷில் மாணவர்களின் எண்ணிக்கை 250,000 க்கும் அதிகமாக உள்ளதாக அதன் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

பைஜூவுடனான ஒப்பந்தத்தில், ஆகாஷின் நிறுவனர்களான சவுத்ரி குடும்பம் முற்றிலுமாக வெளியேறும். அதே நேரத்தில் பிளாக்ஸ்டோன் குழுமன் ஆகாஷில் உள்ள அதன் 37.5 சதவீத பங்குகளில் ஒரு பகுதியை பைஜூவின் பங்குகளுக்காக மாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.