கேரளாவில் நேற்று மேலும் 6004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதார துறை மந்திரி கெ.கெ. சைலஜா தெரிவித்தார் .
நேற்று திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . நேற்று 5158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கேரளாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான 8 லட்சத்து 25 ஆயிரத்து 769 பேரில், 7 லட்சத்து 56 ஆயிரத்து 817 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் - 65 ஆயிரத்து 373 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிட்சை பெற்று வருகிறார்கள். நேற்று 26 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 3373 ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவில், நேற்றைய தினம் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை விபரம் -
மலப்புரம் - 409 பேர், கோழிக்கோடு - 669 பேர், எர்ணாகுளம் - 998 பேர், திருச்சூர் - 437 பேர், கோட்டயம் - 589 பேர், திருவனந்தபுரம் - 386 பேர், ஆலப்புழை - 432 பேர், பாலக்காடு - 225 பேர், கொல்லம் - 528 பேர், பத்தனம் திட்டை - 448 பேர் , வயநாடு - 248 பேர், கண்ணூர் - 259 பேர், இடுக்கி - 271 பேர், காசர்கோடு - 92பேர் .
இவ்வாறு அவர் கூறினார்.