டோக்கியோ
கரோனா வைரஸ் தொற்று படுவேகமாக பரவி வருவதால் மேலும் ஏழு மாகாணங்களில் அவசர நிலை ஜப்பானில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் ஜப்பானின் தலைநகரமாகிய டோக்கியோ உள்பட 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இன்று அவசர நிலை அறிவிக்கப்பட்ட ஏழு மாகாணங்கள் உட்பட ஜப்பானில் கிட்டத்தட்ட சரி பாதி அளவு அவசரநிலை அங்கே உள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வரை 11 மாகாணங்களிலும் அவசரநிலை அமுலில் இருக்கும் என்று ஜப்பானிய செய்தி நிறுவனம் ஆகிய க்யோடா அறிவித்தது.
ஜப்பானில் தேசிய கரோனா வைரஸ் பணிக் குழுவில் புதிதாக 7 மாகாணங்களில் அவசரநிலை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து ஜப்பானுக்கு புதிதாக கரோனா நோயாளிகள் வருவதை கட்டுப்படுத்தவும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கரோனா வைரஸ் பணிக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே தங்கி இருக்க வேண்டுமென்று கரோனா வைரஸ் தேசிய பணிக்குழு கோரியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர் மொத்த எண்ணிக்கை ஜப்பானில் 298 334 எனவும் இறந்தவர் எண்ணிக்கை 39 62 எனவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.