எச் ஏ எல் நிறுவனத்திடமிருந்து 83 போர் விமானங்களை வாங்க ரூ. 48,000 கோடி அனுமதி

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 18:33

புதுடெல்லி

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திடமிருந்து 48,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 83 போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவையின்  பாதுகாப்புத் துறைக்கான கமிட்டிஅனுமதி வழங்கியது.

திங்கட்கிழமை நடந்த பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய பாதுகாப்பு துறைக்கான கொள்முதல்களில் இந்த கொள்முதல் மிகவும் பெரியது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ராணுவம் தனக்குத் தேவையான தளவாடங்களைஅமையும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

எச்.ஏ.எல் நிறுவனம் உற்பத்தி செய்யும் இலகு ரக போர் விமானத்தில் இருந்து பாதுகாப்புத் துறைக்கு என கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள விமானம் எம் கே 1 40 முக்கிய தொழில் நுட்ப மாறுதல்களை கொண்டதாக அமையும் மாறுதல்களில் எலக்ட்ரானிக் போருக்கான சிஸ்டம் முக்கியமானதாகும் இதுதவிர மிக நவீன ராடார் கருவி இந்த போர் விமானத்தின் அம்சமாக இணைந்திருக்கும்.

எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கும் இலகுரக போர் விமானம் ஆகிய தேஜஸ் 50 சதவீத உள்நாட்டு உற்பத்தி பொருள்களைக் கொண்டது ஆனால் எம்கே ஒன் ஏ இலகு ரக போர் விமானத்தில் 60 சதவீத பொருள்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய மாறுதல்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே விமானத்தில் இணைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 விமானங்கள் உற்பத்தி முடுக்கி விடப்படும்.

ஏற்கனவே இரண்டு உற்பத்தி இணைப்பு பிரிவுகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பிரிவும் எட்டு போர் விமானங்களை உற்பத்தி செய்யும்.

மூன்றாவது இணைப்பு பிரிவு ஒன்றை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையில் செயில் நிறுவனம் உற்பத்தி செய்த இலகுரக போர் விமானங்கள் 16 இயங்கிவருகின்றன. இவை தனி போர் விமானப் பிரிவாக உள்ளது குறிப்பிடத்தகுந்தது.