என்டிபிஎல்-க்கு ரூ. 400 கோடி நிலுவையை செலுத்திய மின் விநியோக நிறுவனங்கள்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2021 20:39

புதுடெல்லி,

அரசு மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிஎல்-க்கு செலுத்த வேண்டிய ரூ.400 கோடி நிலுவைத் தொகையை டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் 2 மின் விநியோக நிறுவனங்கள் செலுத்தி உள்ளன.

என்டிபிஎல் நிறுவனம், 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க கோரி இருந்தது. தவறினால், மின்சாரம் வழங்கப்படுவது குறைக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது.

டெல்லி அரசும், ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனமும் இணைந்து டெல்லிக்கு மின்சாரம் விநியோகிக்கும் பிஎஸ்இஎஸ் ராஜ்தானி நிறுவனம் மற்றும் பிஎஸ்இஎஸ் யமுனா பவர் நிறுவனத்தை நடத்துகின்றன. இந்த விநியோக நிறுவனங்கள் ரூ. 400 கோடி நிலுவைத் தொகையை ஆரவள்ளி பவர் கார்பரேஷன் பிரைவேட் நிறுவனத்துக்கு செலுத்தி உள்ளன. இந்த ஆரவள்ளி நிறுவனம் என்டிபிஎல்-யின் சொந்த நிறுவனமாகும்.