புதுடெல்லி
இந்தியாவில் பறவை காய்ச்சல் வைரஸ் 10 மாநிலங்களில் பரவி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ள சூழ்நிலையில் உயிருள்ள கோழிகள். கோழிக்கறி. கோழி முட்டை ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை தடை செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவு அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கோழி, வாத்து போன்ற பறவைகளின் இருந்து மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் வைரஸ் பரவுவது இல்லை என்று உறுதியாகி உள்ளது.
எனவே மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவும் என்ற அச்சம் தேவை இல்லை.
கோழி, வாத்து போன்றவற்றின் மாமிசத்தை முறையாக சமைத்தால் அவற்றின் மூலமாகவும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவாது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கோழி மாமிசம் வேக வைக்கப்படும் போது அதில் உள்ள பறவைக் காய்ச்சல் வைரஸும் அழிந்துவிடுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே வதந்திகள் அடிப்படையில் கோழி, கோழி மாமிசம், கோழி முட்டை ஆகியவற்றை விற்பனை செய்யும் சந்தைகளையும் கடைகளையும் மூட வேண்டாம். அவ்வாறு மூடினால் கோழி வளர்ப்புத் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் அதனால் சிறிய விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் பாதிக்கப்படுவார்கள்.
அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மைகள் எதுவும் இல்லாத நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.