கரியமில வாயு வெளியீட்டை 30 -35 % குறைக்க இந்தியா உறுதி: பிரதமர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 18:22

காந்திநகர்

குஜராத் மாநிலம் பண்டிட்  தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றும் பொழுது இந்தியாவில் வெளியாகும் கரியமில வாயுவில் 30 முதல் 35 சதவீதம் வரை குறைக்க இந்தியா உறுதி பூண்டு இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியாவின் விளக்கு குறித்து தெரிவித்த பொழுது உலகநாடுகள் ஆச்சரியம் தெரிவித்தன இந்தியாவால் அந்த அளவுக்கு கரியமில வாயு உற்பத்தியை குறைக்க முடியுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். தான் முடிவு செய்தபடி கரியமில வாயு உற்பத்தியை 30 முதல் 35 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா துவக்கி உள்ளது. அதற்காக இயற்கை எரிவாயு உற்பத்தி 4 மடங்காக இந்த பத்தாண்டு காலத்தில் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல அடுத்த பத்தாண்டு காலத்தில் இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 2 மடங்காக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எரிசக்தி துறையில் புதிதாக சொத்து வைக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் -அப் நிறுவனங்களை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு என்று சிறப்பு நிதியம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

புதிய நிறுவனம் என்ற வகையில் உங்கள் மனதில் ஒரு ஐடியா இருக்குமென்றால், புதிய உற்பத்திப் பொருள் பற்றிய கருத்து இருக்குமென்றால் அல்லது புதிய உற்பத்தி கொள்கை இன்று உங்கள் மனதில் இருக்கும் என்றால் அந்த செய்திகளை நீங்கள் உற்பத்தி முறையில் சோதனை செய்து பார்க்க விரும்பினால் உங்களுக்கு இந்த நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்படும்.

 இந்த நிதியம் உங்களுக்கு சிறந்த வாய்ப்பைத் தரும் உண்மையில் இந்த அரசாங்கம் புதிய தொழில் முனைவோருக்கு அளித்துள்ள நன்கொடை ஆகவே இந்த நிதியம் அமைந்திருக்கிறது என்று கூறலாம்.

எண்ணெய் எரிவாயு துறையில் மட்டுமல்ல. எரிசக்தித் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. எனவே பெட்ரோலியப் பல்கலைக்கழக மாணவர்களாகிய உங்களுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு தீனதயாள் பெற்றோலியம் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு உரையாற்றும் பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.