முக அழகிரியை பாஜகவில் சேர்க்க முயற்சிப்பேன்: இன்று பாஜகவில் சேர்ந்த ராமலிங்கம் பேட்டி

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 16:17

சென்னை

திமுக அமைப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார்.

இந்தத் தகவலை கே.பி ராமலிங்கமே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கே.பி ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

பாரதிய ஜனதா கட்சியில் நான் இன்று இணைந்துள்ளேன் என்னுடைய வாழ்நாளை பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக நான் பயன்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தேன் 7 பேர் தங்களை நான் சந்தித்திருக்கிறேன் கரோனா வைரஸ் தொற்று காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சர்வகட்சி கூட்டம் ஒன்றை கூட்டியது இந்த வைரஸ் தொற்று நிலவும் காலத்தில் இது தேவையற்ற செயல் என்று நான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதைத் தொடர்ந்து என்னை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தனர்.

என்னை கட்சியிலிருந்து நீக்கி 8 மாத காலம் ஆகிறது.

எந்த நிர்பந்தமும் இல்லாமல் நான் பாரதிய ஜனதா கட்சியில் இன்று சேர்கிறேன்.

 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின். அவருடைய சகோதரர் மு.க. அழகிரி. அவர் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு உள்ளவர்.

அவரை பாரதிய ஜனதா கட்சிக்குள் கொண்டுவர நான் முயற்சிப்பேன். இவ்வாறு கே.பி. இராமலிங்கம் அறிக்கை விடுத்துள்ளார்.