இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று உற்சாகம்: சென்செக்ஸ் 680 புள்ளிகள் நிப்டி 170 புள்ளிகள் உயர்வு

பதிவு செய்த நாள் : 10 நவம்பர் 2020 17:55

மும்பை/ புதுடெல்லி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடியது 7வது நாளாக இன்று சென்செக்ஸ் வெள்ளைப் புலிகள் உயர்ந்தன சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தைத் தொட்டது.

இன்றைய வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 680 புள்ளிகளும், நிப்டி 170 புள்ளிகளும் உயர்ந்தன.

இன்று துவக்கம் முதலே சென்செக்ஸ் முன்னேற்றப்பாதையில் நடைபெற்றது.

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் போது ஒரு நிலையில் சென்செக்ஸ் 43,316 .44 அளவைத் தொட்டது.

இது புதிய உயர் நிலையாகும். ஆனால் வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் சென்று சற்று குறைந்து 43,27 . 65ல் நிலைபெற்றது

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் இன்று 680 புள்ளிகள் உயர்வுடன் நிலைபெற்றது.

டில்லி தேசிய பங்குச் சந்தையின் அடையாளக் குறியீடு நிப்ட்டி இன்று 170 புள்ளிகள் உயர்ந்து 12,631.10ல் நிலைபெற்றது.

இன்றைய பங்கு விலை உயர்வு முதலிடத்தைப் பிடிப்பது பஜாஜ் பைனான்ஸ் அதன் மொத்த உயர்வு 9 சதவீதமாகும்.

இன்றைய பங்கு விலை உயர்வினால் கணிசமான லாபம் அடைந்த நிறுவனங்கள்: இண்டஸ்இந்த் வங்கி, எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், எச்டிஎஃப்சி, எஸ் பி ஐ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி.

இன்று நஷ்டமடைந்த நிறுவனங்கள்:

டெக் மஹிந்திரா, எஸ் சி எல் டெக், இன்ஃபோசிஸ், பெஸ்டிவல் இந்தியா, சன் பார்மா, டிசிஎஸ்.

அமெரிக்க நிறுவனம் ஆகிய பாய்சர் பயோ எந்தக் ஆகியவை கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து மூன்றாவது கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியது

 இன்றைய பங்குச் சந்தையில் உற்சாகம் நிலவ காரணமாக அமைந்தது. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் நிலவிய உற்சாகம் இந்தியாவிலும் எதிரொலித்தது.