சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் 1.88 லட்சமாக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 18 அக்டோபர் 2020 10:52

சென்னை

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 944 ஆக உயர்ந்தது. 15 மண்டலங்களில் இதுவரை அதிகபட்சமாக  அண்ணா நகரில் 20,422   பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு உள்ளது என மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் எந்தந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி இன்றும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 6 லட்சத்து 32 ஆயிரத்து  708 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நிலவரம் :

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  1,88,944 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 13,353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் தற்போது வரை கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 12,907 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பெற்று குணம் அடைந்தவர்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 533 பேர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. சென்னையில் இதுவரை 3,504 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,586-ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 900 கீழே குறைந்திருந்தது. ஆனால் மீண்டும் தற்போது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 மண்டலங்களில் 1000ஐ  தாண்டி உயர்ந்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் 12,907  பேர் கொரோன வைரஸ் நோய் தடுப்புக்கான மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

அம்பத்தூரில் 839 பேரும்,

கோடம்பாக்கத்தில் 1,138 பேரும்,

அண்ணாநகரில் 1,219 பேரும்,

தேனாம்பேட்டையில் 1,021 பேரும்

அடையாறில் 999 பேரும்

திரு.வி.க. நகரில் 1,004 பேரும்

வளசரவாக்கத்தில் 782 பேரும்,

மணலியில் 199 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவ சிகிச்சை பெற்றுவருபவர்கள், குணமடைந்தவர்கள் விவரம் மண்டலவாரியாக கீழே தரப்பட்டுள்ளது: