திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் இளைய மகன் மறைவு – ஸ்டாலின், முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 19:27

சென்னை

சென்னை, சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகன் (34) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியனின்  இளைய மகன் சு. அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் 

சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் அவர்களின் இளைய மகன் சு. அன்பழகன் அவர்கள் உடல்நல குறைவால் இன்று (17.10.2020) காலமானதையொட்டி சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, ஆறுதல் கூறினார்.

துணை முதலமைச்சர் இரங்கல்

சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியனின்  இளைய மகன் சு. அன்பழகன் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.