ரூ. 5246.27 கோடி மதிப்புள்ள நெல் பஞ்சாப் அரசு கொள்முதல் செய்துள்ளது

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 19:17

சண்டிகார்

அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வரை 47 53 651 மெட்ரிக் டன்கள் நெல்லை பஞ்சாப் அரசு கொள்முதல் செய்துள்ளது. அரசு கொள்முதல் செய்துள்ள நெல்லின் மொத்த மதிப்பு ரூபாய் 5246.27 கோடியாகும்.

பஞ்சாப் சிவில் சப்ளைஸ் அமைச்சர் பாரத் பூஷன் ஆஸு இந்தத் தகவலை தெரிவித்தார்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் இதுவரை 35,42,122 வேற்றிடங்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

அரசு கொள்முதல் செய்த நெல் போக 18.860 டன்கள்  நெல்லை அரிசி ஆலைகள் கொள்முதல் செய்து இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் கொள்முதல் காரணமாக பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 3,56 ,516 என்று அமைச்சர் தெரிவித்தார்.