நியூஸிலாந்தில் ஜெசிந்தா ஆர்டன் 2வது முறையாக மாபெரும் வெற்றி

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:15

வெல்லிங்டன்

நியூசிலாந்தில் தனியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலத்துடன் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றது என சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது அங்கீகாரம் அளிக்கும் வகையில் நியூஸிலாந்து மக்கள் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் உரிமை வழங்கியுள்ளனர்.

கடந்த 50 ஆண்டு காலத்து இவ்வளவு பலத்தை தொழிலாளர் கட்சி ஒருபோதும் பெற்றதில்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீங்கள் தந்துள்ள மகத்தான ஆதரவு காரணமாக நாங்கள் அலட்சியமாக இருக்க மாட்டோம் தொழிலாளர் கட்சியின் ஆட்சி ஒவ்வொரு நியூஸிலாந்து குடிமகனின் உரிமையையும் தேவை ஏன் கவனத்தில் கொண்டு செயல்படும் என்று ஜெசிந்தா கூறினார்.

தேர்தல் முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து ஜெசிந்தா தன் வீட்டிலிருந்து வெளியே வந்து கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நியூஸிலாந்து எதிர்க்கட்சியான தேசிய கட்சியின் தலைவர் ஜுடித் காலின்ஸ் மரியாதை நிமித்தம் மஹிந்தவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் 49 சதவீத வாக்குகளை தொழிலாளர் கட்சி பெற்றுள்ளது தேசியக் கட்சி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

மொத்தம் உள்ள 120 தொகுதிகளில் அறுபத்து நான்கு தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.