நான்காவது நாளாக பாங்காக்கில் பேரணி தொடர்கிறது

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 17:39

பாங்காக்

வெள்ளி அன்று இரவு கலைந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐக்கியக் கூட்டணி விடுத்த அழைப்பை ஏற்று சனிக்கிழமையன்று நான்காவது நாளாக இன்றும் பேரணியைத் தொடர்ந்தார்கள்.

வெள்ளி அன்று மாலை 6:30 மணி அளவில் கவர்ன்மெண்ட் ஹவுஸ் முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நீலச் சாயம் கலந்த தண்ணீரை லாரிகளில் கொண்டுவந்து பீச்சத் தொடங்கினார்கள்.

இது அமைதியாக கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடையே மேலும்  ஆத்திரத்தைக் கிளறியது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த பொருட்களை தூக்கி போலீசார் மீது வீசினார்கள். பலர் தங்கள் கைகளில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில்களை தூக்கி அடித்தனர்.

சிலர் விதித்திருந்த தடையை நீக்கி அதனை வீசினார்கள்.

ஃபிளை ஓவர் மேல் நின்றுகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் தாங்கள் வைத்திருந்த கூடைகளை போலீசார் மேல் வீசி எறிந்தார்கள் அவர்களும் தண்ணீர் பாட்டில்களை போலீசார் மீது வீசினார்கள்.

போலீசார் பீச்சிய நீல நிறத் தண்ணீரில் ஏதோ ரசாயன பொருட்களை கலந்து இருந்தார்கள். அதனால் தண்ணீர் முகம், கண், உதடு, மூக்கு ஆகியவற்றில் படும்பொழுது எரிச்சலை உண்டாக்கத் தொடங்கியது.

தண்ணீரில் ரசாயனப் பொருட்கள் இருப்பது உண்மை. ஆனால் அது எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் சில போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இரவு 2:30 மணி அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் கனமழை பெய்யத் தொடங்கியது.

அதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மழைக்கு ஒதுங்க பாதுகாப்பான இடங்களைத் தேடி நகரத் தொடங்கினார்கள்.

ஆர்ப்பாட்ட ஐக்கிய முன்னணி தரப்பிலிருந்து பல்கலைக்கழகத்திலும் சியாம் செல்வதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்த இரண்டு இடங்களிலும் சிலர் தங்கினார்கள். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களை கூட்டம் கலையத் தொடங்கியது அதைத் தொடர்ந்து 8:30  மணி அளவில் ஆர்ப்பாட்டத்திற்கு கூடியிருந்தவர்கள் கூறியுள்ளார்கள். வெள்ளிக்கிழமை கலைந்து செல்லலாம் சனிக்கிழமை மறுபடியும் நாம் கூடுவோம். தாய்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகும் வரை நமது ஆர்ப்பாட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மெதுவாக கலைந்து செல்லத் தொடங்கினார்கள்.

அறிவிப்பைத் தொடர்ந்து போலீசாரும் கலைந்து செல்லும்படி மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருந்தனர்

இரவு 10:00 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து விட்டனர் போலீசார் கவர்மெண்ட் ஹவுஸ் முன்னுள்ள இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சனிக்கிழமையன்று பாங்காக் நகரில் மெட்ரோ ரயில், பேருந்துகள் அனைத்தும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருந்தன. 

அதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்பு போல ஒரே இடத்தில் கூடுவது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. அதனால் பிற்பகல் 3 மணி அளவில் பங்காக் நகரில் 3 இடங்களில் சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

லாட் ராவ், பிடிஎஸ் ஸ்டேஷன், வோங் வியான் யார் வளைவு ஆகிய மூன்று இடங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடும்படி அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான 1 மணி நேரத்தில் அந்த 3 இடங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிய தொடங்கினார்கள். பலர் நடந்து வந்தார்கள். மோட்டார்சைக்கிள்கள். டாக்ஸி,  கார்கள் ஆகியவற்றில் மக்கள் வந்து இறங்கினார்கள்.

இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கூடினார்கள்.

இந்த மூன்று இடங்களைத் தவிர மெட்ரோவில் நான்காவது ரோடு, பிடிஎஸ் நகர் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தார்கள்.

தாய்லாந்தில் 17 மாகாணங்களில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன் பேரணிகளில் மாணவர்கள் பங்கு கொள்ளக்கூடாது என்று தம்மா சேட் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அந்த அறிவிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மாணவர்கள் தலைவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே  கூடி பல்கலைக்கழகம் பிறப்பித்த ஆணையை நிராகரிப்பதாக அறிவித்தனர்.

கடந்த ஒரு வார காலமாக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை அன்று ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர் ஜாமீனில் வெளி வந்தனர்.