இந்திய மெடிக்கல் அசோசியேசன் தலைவராக நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தேர்வு

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 10:22

சென்னை

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் ஜே.ஏ. ஜெயாலால் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தலைவராக வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

டாக்டர் ஜே.ஏ. ஜெயாலால் டிசம்பர் 27-ஆம் தேதி தற்பொழுது இந்திய மெடிக்கல் அசோசியேசன் தலைவராக உள்ள டாக்டர் ராஜன் சர்மாவிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று இந்திய மெடிக்கல் அசோசியேசன் அறிவித்துள்ளது.

புதிதாக தோன்றியுள்ள கல்விக்கொள்கை, தேசிய மெடிகல் கமிஷன் ஆகியவைகளுக்கு மத்தியில் நவீன மருத்துவத்தின் தனித்துவத்தை காப்பாற்ற வேண்டிய சவால் நம்முன் உள்ளது என்று ஜெயாலால் குறிப்பிட்டார்.

பிற துறை மருத்துவ முறைகளுடன் நவீன மருத்துவத்தை கலப்பது முறையல்ல.

சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு மத்திய சுகாதார ஊழியர் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற மத்திய அரசுடன் கலந்து பேசி முயற்சிகளை இந்திய மெடிக்கல் அசோசியேசன் மேற்கொள்ளும் என்று டாக்டர் ஜெயாலால் கூறினார்.