5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பதிவு செய்த நாள் : 19 செப்டம்பர் 2020 23:55

சென்னை,

ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் லீக் முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்ய உள்ளது. தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

ரோகித் சர்மா(12 ரன்கள்), பியுஷ் சாவ்லா வீசிய 5வது ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் ஆனார். இதனை தொடர்ந்து சாம் கர்ரன் வீசிய 6வது ஓவரில் சேன் வாட்சனிடம், குயின்டன் டி காக்(33ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ்-சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தனர். தீபக் சாஹர் வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் யாதவ்(17 ரன்கள்) சாம் குர்ரனிடம் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, வந்த வேகத்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனையடுத்து மும்பை அணி 12வது ஓவரில் 3 விக்கெட் இழப்புடன் 100 ரன்களைக் கடந்தது.

சவுரப் திவாரி(42 ரன்கள்) ஜடேஜா வீசிய 15வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா(14 ரன்கள்) ஜடேஜா வீசிய அதே ஓவரில் ஆட்டமிழந்தார்

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சாஜர்(2 ரன்கள்) மற்றும் பும்ரா(5 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.

இந்நிலையில் 19.2 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முரளி விஜய் - 1 (6) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஜடேஜா மற்றும் சஹார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  சாம் குர்ரான் - 18(5) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.