டாஸ் வென்றது சிஎஸ்கே அணி: மும்பை இந்தியன்ஸ் முதல் பேட்டிங்

பதிவு செய்த நாள் : 19 செப்டம்பர் 2020 19:21

சென்னை

ஐபிஎல் லீக் முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்ய உள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் சூப்பர் ஸ்டார் தோனி புதிய கெட்டப்பில் இருக்கிறார்.

438 நாட்களுக்கு பிறகு களத்தில் தோனியின் தரிசனம் கிடைத்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.