ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2020 17:17

சென்னை

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் கால அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிடப்பட்டது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பி.சி.சி.ஐ. கிரிக்கெட் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்தது.

தற்போது, 2020ம் வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளை  ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியை மும்பை இந்தியன் அணியுடன் தொடங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிப் போட்டியை கிங்ஸ் XI பஞ்சாப் அணியுடன் நிறைவு செய்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல் ஆகிய அணிகளும்  2020 ஐபிஎல்  தொடரில் விளையாட உள்ளன. ஐ பி எல் போட்டிகள் பற்றிய முழு விவரமும் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளது


ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாக அமைப்பு முடிவு செய்தது. இதன்படி செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது.

வீரர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று சோதிக்கவும் அவர்களை தனிமைப்படுத்தி வைக்கவும் 8 அணி நிர்வாகங்களும் பணிகளைத் தொடங்கின.

8 அணி நிர்வாகங்களும் வீரர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை நடத்தியது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்படவில்லை.

துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் கிரிக்கெட் அணிகள் பயிற்சி ஆட்டத்தை துவக்கியுள்ளன.