யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் சுற்றில் சுமித் நாகல் வெற்றி

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2020 15:38

புதுடெல்லி

கடந்த 7 ஆண்டுகளில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இந்தியர் ஒருவர் வெற்றி பெறுவது இதுவே முதல் தடவையாகும். இந்த சாதனைக்கு உரியவர் சுமித் நாகல்.

சுமித் நாகல். அமெரிக்க விளையாட்டு வீரர் பிராட்லி கிளாஹானை 6-1, 6-3, 3-6,  6-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2013ம் ஆண்டு சோம்தேவ் தேவர்மான் வெற்றி பெற்ற பிறகு முதன் முறையாக சுமித் நாகல் 2020இல் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியாமை எதிர்த்து போட்டியிடுகிறார்.

சென்ற ஆண்டு சுமித் நாகல் யுஎஸ் ஓபன் ரோஜர் ஃபெடரர் எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.