ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் உரிமையைப் பெற்றது டிரீம் 11

பதிவு செய்த நாள் : 18 ஆகஸ்ட் 2020 18:03

மும்பை

ஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சர் உரிமையைப் பெற்றது டிரீம் 11 நிறுவனம்.

ஏற்கனவே இந்த உரிமை  வழங்கப்பட்ட விவோ நிறுவனம் விலகிக் கொண்ட காரணத்தினால் புதிதாக வேறு ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டைட்டில் ஸ்பான்சர் உரிமையை பெற விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டன.

 டிரீம் 11 நிறுவனம்  222 கோடி ரூபாய் குறிப்பிட்டிருந்தது 

அதற்கு அடுத்த இடத்தில் இருந்த பயிற்சி நிறுவனம் ரூ. 201கோடி குறிப்பிட்டு இருந்தது  

மூன்றாவது இடத்தில் உள்ள யூ என் அக்காதமி நிறுவனம் ரூ 170 கோடி குறிப்பிட்டிருந்தது. 

கூடுதல் தொகை குறிப்பிட்டிருந்த டிரீம் 11 தேர்வு செய்யப்பட்டது என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படெல் கூறினார்.

விவோ நிறுவனம் ரூ 440 கோடி குறிப்பிட்டிருந்தது.

நீண்ட நாட்களாக ஐபிஎல், பிசிசிஐ ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வரும் டிரீம் 11 நிறுவனம் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் என்ற சீன நிறுவனத்தில் சிறுபான்மை முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது.