பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2020 17:27

சென்னை,

பக்ரீத் பண்டிகையையொட்டி (ஆகஸ்ட் 1ம் தேதி) இஸ்லாமியர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி:

எழுச்சியுடன் கொண்டாடப்படும் - தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை திமுக சார்பில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்புத் தொழுகை, ஈகை” ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை தினத்தில் “இரு கண்களாக” பாவித்து- நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்- இந்தத் தருணத்திற்குரிய சுய சுகாதாரப் பாதுகாப்புகளுடனும் கொண்டாடிட வேண்டும்.

இவ்வாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்,