அங்கன்வாடிகளை நவீனமயமாக்கும் இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதித்ய ரஞ்சன், ‘டிட்லி’ போன்ற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அங்கன்வாடிகளை நவீனப் படுத்தி வருகின்றார். இவர் மற்ற அங்கன்வாடி

களுக்கு முன் உதாரணமாக அங்கன்வாடி களை நவீனப்படுத்தி வருகிறார். ஆதித்த ரஞ்சன் ஐ.ஏ.எஸ் தேர்வாகி, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பும் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அந்த மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவை மோசமான நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொறுப்பான பதவியில் இருப்பதால், இந்த நிலையை மாற்ற சில திட்டங்களுடன் களத்தில் இறங்கினார்.

“அதிக அதிகாரம் வந்தால், அதிக பொறுப்பும் சேர்ந்து வருகிறது” என கூறப்படுவதுண்டு. இதை நிரூபிக்கும் விதமாக இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதித்ய ரஞ்சன் செயலாற்றினார். அவர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றுவதால், மக்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பு கிடைத்தது. ஜார்கண்டில் உள்ள பொகாரா அருகே பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த ஆதித்ய ரஞ்சன், பள்ளிப்படிப்பை முடிக்கவே பட்ட கஷ்டத்தை உணர்ந்தவர். இதனால் கல்வி கற்பிக்கும் பள்ளிகூடம் போன்றவை களின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்தார். அவர் சாய்பாசா என்ற இடத்தில் உள்ள பள்ளி களின் நிலையை மேம்படுத்த முடிவு செய்தார்.

முதலில் இவரது சம்பளத்தில் இருந்து மாதிரி அங்கன்வாடியை அமைக்க முடிவு செய்தார். தனது சொந்த பணத்தில் இருந்து முதல் ‘மாதிரி அங்கன்வாடி’யை, மருத்துவ வசதி, கல்வி ஆகியவைகளை ஒருங்கிணைத்து அமைத்தார். இது வெற்றி கரமாக செயல்பட்டது. இதன் பிறகு இது போல் அங்கன்வாடிகளை மேம்படுத்த அரசிடம் நிதி உதவி பெற முடிவு செய்தார். இவரது மாவட்டத்தில் அங்கன்வாடிகள் செயல்படுவது பற்றி ஆய்வு செய்யும் போது, அங்கன்வாடிகளில் உள்ள 3 முதல் ஆறு வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு கல்வி ஏதும் கற்பிக்கப்படுவதில்லை. அங்கன்வாடி மையங்களுக்கு மதிய உணவு சாப்பிட மட்டுமே குழந்தைகள் வருகின்றனர் என்பதை அறிந்தார்.

அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவு, மருத்துவ வசதி, கல்வி ஆகிய வைகளை வழங்கினால் பெண்களும், குழந்தைகளும் பலனடைவார்கள் என்று கருதினார். இதற்காக டிட்லி போன்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அங்கன்வாடிகளை மேம்படுத்தினார். அங்கன்வாடி மையங்களில் வேலை செய்யும் ஆயாக்களுக்கு டிட்லி பயிற்சி அளித்தது. அங்கன்வாடி மையங்களில் அமைந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து இலவசமாக மருந்துகள் கொடுக்கப் பட்டன. இவை வெற்றிகரமாக செயல் படுவதை பார்த்த பிறகு, இந்த வருட இறுதிக்குள் ஆயிரம் அங்கன்வாடிகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளார் ஆதித்ய ரஞ்சன் ஐ.ஏ.எஸ்.

“நான் முதன்முதலில் அங்கன் வாக்கு சென்ற போது, அங்கிருந்த நிலைமையை பார்த்து திகைத்து போனேன். அங்கன் வாடிகளின் நோக்கம் குழந்தைகளுக்கு உணவு வழங்கு வதும், அவர்கள்  படிக்க வருவதை ஊக்கு விப்பதுமே. ஆனால் இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருந்தது. குழந்தைகள் சாப்பிட மட்டுமே வருகின்றனர். சாப்பிட்டு முடித்த பிறகு வீட்டிற்கு சென்று விடுகின்றனர். இந்த குழந்தைகளுக்கு உணவு, உடை, படிக்க புத்தகம், நோட்டு ஆகியவற்றை வழங்கி, சுகாதாரத்தை மேம்படுத்திய பிறகு, நிலைமை மாறுவதை கண்கூடாக பார்த்தோம். அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நாங்கள் ‘சமிக்சா’ என்ற செல்போன் ‘ஆப்’ வடிவமைத்தோம். இதனால் அங்கன்வாடிகள் செயல்படுவதை கண்காணிக்கவும், அவை எல்லா நாட்களிலும் இயங்குவதை உறுதி செய்யவும் முடிந்தது” என்று ஆதித்ய ரஞ்சன் தெரி வித்தார்.

தற்போது எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது. சிங்பும் மாவட்டத்தில் பெரும்பாலோருக்கு கம்ப்

யூட்டரை இயக்குவது பற்றி தெரிந்திருக்க வில்லை என்பதை ஆதித்ய ரஞ்சன் உணர்ந்தார்.

இந்த நிலையை மாற்ற மாவட்ட இ–ஆளுமை சங்க கம்ப்யூட்டர் பயிற்சி திட்டம் [District e-–governance society computer training program (DeGS)], என்ற புதுமையான,எல்லோரும் பயன் அடைய கூடிய திட்டத்தை அறிமுகப்

படுத்தினார். இதன் நோக்கம் சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர் களுக்கு கம்யூட்டர் பயிற்சி அளிப்பதே. இதன் படி 60 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதில் 32 வகையான பயிற்சிகள் வழங்கப்படும்.

இங்கு பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கா னோர், இந்த மாவட்டத்தில் கம்யூட்டர் பயிற்சி வெற்றிகரமாக நடப்பதாக கூறு கின்றனர். இங்கு ஏற்கனவே 1,700 பேர் பலனடைந்துள்ளனர். இந்த பயிற்சியை எந்த வயதினரும் சேருவதற்கு தகுந்த மாதிரி மாற்றியமைக்க ஆதித்ய ரஞ்சன் திட்டமிட்டுள்ளார். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதான காரியமல்ல. இது மெல்ல மெல்லதான் ஏற்படும் என்கின்றார் ஆதித்ய ரஞ்சன்.

அரசு நிர்வாகத்தில் எல்லாமே மிக மெதுவாகதான் நடக்கும். நீங்கள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் பலன்களை பற்றி அறிய வேண்டு மெனில், அதற்கு நீண்டகாலமாகும். தற்போது வரை நாங்கள் சிங்பும் மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தி யில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளோம்.

இது தினசரி என்னை மகிழ்விக்கிறது. உங்களால் அடுத்தவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற செய்ய முடியும் எனில், அது உங்கள் வேலை யில் திருப்தியை தருகிறது. அந்த உணர்வு ஈடு செய்ய முடியாதது. எங்களிடம் புதிய அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கு போதிய நிதி இல்லை. இது போன்ற திட்டங்களுக்கு மாநில அரசு அதிக அளவு நிதி ஒதுக்கும் என்று நம்புகின்றேன் என்று ஆதித்ய ரஞ்சன் தெரிவித்தார்.

இவர் ‘நடமாடும் அதிசயம்’ (Wonder On Wheel) என்ற பெயரில் (நடமாடும் அறிவியல் மையம்)  அறிவியலை விளக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். வாகனத்தில் அறிவியல் தொடர்பானவைகள் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்களின் பற்றிய விபரங்களை ஆராய்ந்தால், இவர்களில் பெரும்பாலோர் அறிவியல், கணக்கு தவிர மற்ற பாடங்களை எடுத்து படித்திருப்பதை அறிந்தார். இதற்கான காரணத்தை பற்றி ஆராயும் போது மேற்கு சிங்பும் மாவட்ட பள்ளிகளில் தேவையான அளவு அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டார். இதனால் பெரும்பாலான மாணவர்கள் வரலாறு, இலக்கியம் போன்றவைகளையே எடுத்து படிக்க வேண்டியதுள்ளது. இந்த நிலையை மாற்ற, இளம் தலைமுறையினர் மத்தியில் அறிவியல் தேடலை ஏற்படுத்த நடமாடும் அதிசயம் என்ற பெயரில் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்த முயல்கிறார்.

இதற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு பள்ளிகூடத்திற்கும் நன்கு பயிற்சி பெற்ற அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் நன்கு திட்டமிட்ட பாடதிட்டத்தில் வகுப்புகளை நடத்துகின்றனர். அதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வாகனத்தில் தேவையான அறிவியல் கருவிகள் வைக்கப்படுகின்றன. இதனால் செய்முறை பயிற்சியும் கிடைக்கின்றது.

இந்த திட்டம் சதார் பகுதியில் 30 பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி யுள்ளனர். இதன் அருகே உள்ள சக்கரா தார்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளிலும் நடை முறைப்படுத்தி யுள்ளனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஈடாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் அறிவியல் பாடங்களில் செய்முறை பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆதித்ய ரஞ்சன் கருதுகிறார்.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதே ஆதித்ய ரஞ்சன் ஐ.ஏ.எஸ் விருப்பம்.

நன்றி: லாஜிகல் இந்தியன் இணைய தளத்தில் அங்கிதா சிங்.