ஏழை பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

தாய்லாந்தைச் சேர்ந்த 60 வயது பெண், அவர் நாட்டைச் சேர்ந்த ஏழை பெண்களை வேலை வாங்கித்தருவதாக கூறி சுவிட்சர்லாந்து அழைத்து வந்துள்ளார். அவர்கள் சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்ததும், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அவர்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்து தங்க வைத்ததற்காக, அந்த இளம் பெண்கள் 30 ஆயிரம் பிராங்க் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

இது பற்றி விசாரித்த பெர்ன் மாநில நீதிமன்றம், அந்த தாய்லாந்து பெண்ணுக்கு பத்து வருட சிறை தண்டனையும், 78 ஆயிரம் பிராங்க் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.