டி.வி. பேட்டி: டான்ஸ் என் மூச்சு! – குமரன் தங்கராஜன்

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

*    “பாண்டியன்  ஸ்டோர்ஸ்”, ‘கதிர்’ ……குமரன்  தங்கராஜன்.

*    அடிப்படையில், அவர் ஒரு டான்சர்.

*    குரூப் டான்சர்களில் ஒருவராகத்தான்  மீடியா வுக்குள் நுழைந்தார்.

*    மார்ச் 10, 1989ல் பிறந்தவர்.

*    அவருக்கு பூர்வீகம், சென்னை.

*    5 அடி  6  அங்குல  உயரம் உள்ளவர்.  எடை -70  கிலோ.

*    சென்னை வேலம்மாள் பள்ளியில்  படித்தார்.

*    பச்சை  தமிழன். ஆங்கிலமும் தெரியும்.

*    ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ (விஜய்  டிவி) டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற் பாளராக அறிமுகமானார்.

*    அதன்பின், ‘மானாட  மயிலாட’  4 மற்றும்  5வது சீசன்களிலும்  (கலைஞர்  டிவி),  ‘ஜோடி பன் அன்லிமிடட்’  நிகழ்ச்சியிலும் போட்டியாளராக  கலந்துகொண்டார்.

*    திருமணமானவர்.  காதல் திருமணம்.  மனைவி  பெயர், சுஹாசினி.

*    நடுநிலைமையாக  இருப்பது  அவரு டைய கேரக்டர்.

*    வாக்குவாதம் செய்ய மாட்டார். மற்றவர்கள் சொல்வதை   முழுமையாக  காது கொடுத்து  கேட்பார். குறுக்கே பேசமாட்டார்.  கடைசியில், தன் கருத்தை தெரிவிப்பார்.

*    கண்ணியமாக நடந்து கொள்வது அவரிடமுள்ள பாசிட்டிவ் விஷயம்.

*    பியூர்  நான் – விஜிடேரியன்.

*    ஏ.எல். விஜய் டைரக்ட் செய்த “இது என்ன மாயம்?” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக மானார்.

*    “மையம்” படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார்.

*    “வான் வருவான்” என்கிற  ஷார்ட் பிலிமிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

*    “மாப்பிள்ளை,” “ஈரமான ரோஜாவே”  அவர் ஏற்கனவே நடித்திருக்கும் சீரியல்கள்.

* வயலெட் -  அவருடைய  பேவரிட் கலர்.

* துபாய் உட்பட ஐக்கிய அரபு நாடுகள், ஆர்லண்டோ ஆகியவை  அவர் பெரிதும் விரும்பும் நாடுகள்.

* பிடித்த விளையாட்டு, பேட் மின்டன்.

* டான்சிங்  அவருடைய முக்கிய  ஹாபி. “டான்ஸ்  என்னுடைய மூச்சு! அது இல்லாமல் நானில்லை!”

*சினிமா பாடல்களை ரசித்து  கேட்பார்.

*வருங்காலத்தில்  எப்படியாவது டான்சை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டுமாம்.

* பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், மைக்கேல் ஜாக்சன்  இந்த மூவரின் தீவிர ரசிகர்.

– இருளாண்டி