கூச்சமே முட்டுக்கட்டை!

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020

கட­லுார் மாவட்­டம், புதுப்­பா­ளை­யம், அரசு உயர்­நிலை பள்­ளி­யில், 1962ல், 5ம் வகுப்பு படித்­துக் கொண்­டி­ருந்­தேன். பள்ளி விழா­வின் போது, நாட­கம், கட்­டுரை, விளை­யாட்டு போட்­டி­கள் நடத்தி பரிசு வழங்­கு­வர்.

கூச்ச சுபா­வத்­தால், எந்த போட்­டி­யி­லும் கலந்து கொள்­ளா­மல் தவிர்த்­தேன். புதி­தாக பொறுப்­பேற்­றி­ருந்த தலைமை ஆசி­ரி­யர் இதைக் கேள்­விப்­பட்டு அழைத்­தார்.

பயந்து நடுங்கி சென்ற என்­னி­டம், 'எவ்­வ­ளவோ திற­மை­கள் ஒளிந்து இருக்­க­லாம்; கூச்­சம், பயம் என ஒதுங்­கு­வ­தால் பய­னில்லை... திற­மையை தடுக்க, நீயே போட்­டுக் கொள்­ளும் முட்­டுக்­கட்டை. வெற்றி, தோல்­வியை பொருட்­டாக கொள்­ளா­மல் திற­மையை காட்டு...' என்று அறி­வு­ரைத்­தார்.

போட்­டி­க­ளில் பங்­கேற்­றேன். கட்­டுரை எழு­து­வ­தில், முதல் பரிசு பெற்­றேன்; பெரும் மகிழ்ச்சி அடைந்­தேன்.

தற்­போது, என் வயது, 67; என் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­வரை மன­தில் கொண்­டுள்­ளேன்.

வார­ம­லர் உட்­பட, முன்­னணி இதழ்­க­ளில் என் படைப்­பு­கள் பிர­சு­ர­மா­கும் போதெல்­லாம், அவர் நினைவு கண்­ணீ­ராய் பெருகி வழி­கி­றது.

-–- ஆர்.ரகோத்­த­மன், பெங்­க­ளூரு.