பலன்!

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020

திரு­மங்­க­லம் ஓடு தொழிற்­சா­லை­யில், காலை, 7:30 மணிக்கு, அழைப்பு சங்கு ஒலிக்­கும்; ஊழி­யர்­கள் பணிக்கு செல்­வர்; மாணவ, மாண­வி­யர் பள்­ளிக்கு புறப்­ப­டு­வர்.

பள்­ளி­யில், 5ம் வகுப்பு படித்­தான் கும­ரன். அவனை அழைத்த அந்த ஊர் பெரி­ய­வர், 'தமி­ழில் கடி­தம் எழுதி தர முடி­யுமா...' என்­றார்; விருப்­பத்­து­டன் ஒப்­புக் கொண்­டான்.

காகி­தத்தை தந்து, 'நான் சொல்­வதை தவ­றில்­லா­மல் எழுது...' என்­றார். கடி­தம், பத்து வரி­கள் கூட இல்லை. எழு­தி­யதை வாங்கி, பிழை­களை சுட்­டிக்­காட்டி, 'இதோ பார்... வல்­லி­னத்­திற்கு பதி­லாக, மெல்­லி­னம் போட்­டி­ருக்கே... இந்த இடத்­தில், ஒற்­றெ­ழுத்து வராது... பன்­மையை பார்த்து எழு­த­ணும்...' என்று அறி­வு­ரைத்­தார்.

அந்த அறி­வு­ரை­களை கவ­ன­மாக கேட்­டான். பாடங்­கள் எழு­திய போதும், அந்த தவ­று­கள் ஏற்­ப­டாத வண்­ணம் கவ­னித்து வந்­தான்.

அடுத்­த­டுத்த நாட்­க­ளில், அதே பள்ளி மாண­வர்­கள் சிலரை அழைத்து, கடி­தம் எழு­தக் கேட்­டார். கும­ர­னின் நண்­பர்­க­ளும் அதில் இருந்­த­னர். கடி­தத்­தில் ஏற்­பட்­டி­ருந்த பிழை­களை திருத்தி சுட்­டிக் காட்­டி­னார்.

கையெ­ழுத்து கிறுக்­க­லா­க­வும், நேர்க்­கோட்­டில் இல்­லா­த­தை­யும் சொன்­னார். அவற்றை சரி செய்­யும் வித­மாக, 'தவறு இன்றி சீரா­க­வும், நிதா­ன­மா­க­வும் எழு­த­ணும்...' என்று அறி­வு­ரைத்­தார்.

நாள­டை­வில், கும­ர­னைத் தவிர, மற்­ற­வர்­கள் சாக்கு போக்கு கூறி, கடி­தம் எழு­தும் பயிற்­சிக்கு வரா­மல் நழு­வி­னர்.

ஆனா­லும், அவ்­வப்­போது அழைத்து பயிற்சி அளிக்க தவ­ற­வில்லை பெரி­ய­வர்.

அவ­ரது அறி­வுரை கேட்­ட­தால், பிழை­களை திருத்­திக் கொண்­டான் கும­ரன்; கையெ­ழுத்­தும், மணி­யாக மாறி­யது!

பள்ளி ஆண்டு போட்­டி­யில், தவ­றின்றி எழு­து­வது, அழ­கிய கையெ­ழுத்து என, போட்­டி­கள் நடந்­தன. அவற்­றில் வென்ற கும­ர­னைப் பாராட்டி பரிசு வழங்கி கவு­ர­வித்­தது பள்ளி நிர்­வா­கம்!

'பெரி­ய­வர் தந்த பயிற்­சி­யால் தான் பரிசு கிடைத்­தது...' என, பெரு­மை­யாக கூறி­னான் கும­ரன். மற்ற சிறு­வர், சிறு­மி­யர் தவறை உணர்ந்­த­னர்; பின், பெரி­ய­வரை தேடிப் போய் பயிற்­சியை தொடர்ந்­த­னர். சிறப்­பாக எழு­த­வும், படிக்­க­வும் கற்­ற­னர். வாழ்க்­கை­யில் மாற்­றம் ஏற்­பட்­டது.

குழந்­தை­களே... பெரி­யோ­ரின் அறி­வு­ரையை ஏற்­ப­து­டன், முறை­யாக பயிற்சி செய்­தால், எல்லா வற்­றி­லும் வெற்றி நிச்­ச­யம்.

- – என்.கிருஷ்ண மூர்த்தி