மெஸ்சி அசத்தலில் பார்சிலோனா வெற்றி

பதிவு செய்த நாள் : 28 ஆகஸ்ட் 2017 09:28

மாட்ரிட்:

 ஸ்பெயினில் லா லிகா கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடக்கிறது. பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அலாவ்ஸ் அணியை வீழ்த்தியது. 5 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற லயனல் மெஸ்சி 2 கோல் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மெஸ்சி தனக்கு கிடைத்த பெனல்டி வாய்ப்பை கோல் அடிக்காமல் வீணடித்தார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மெஸ்சி பெனல்டி வாய்ப்பை கோலாக மாற்ற தவறியதும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பார்சிலோனா அணிக்கு விளையாடிய நட்சத்திர வீரர் நெய்மர் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு 222 மில்லியன் யூரோ பெற்றுக் கொண்டு .பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு சென்ற பிறகு நடந்த போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பார்சிலோனா அணி பயிற்சியாளர் வால்வெர்ட் கூறுகையில், கடுமையான நேரத்திற்கு பிறகு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மெஸ்சி சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம் என்றார்.