என்னை துன்புறுத்தாதீர்கள் ரொனால்டோ கதறல்

பதிவு செய்த நாள் : 18 ஆகஸ்ட் 2017 09:42


மேட்ரிட் : 

ஸ்பெயின் நாட்டின் ரியல்மேட்ரிட் கால்பந்து அணியின்  நட்சத்திர வீரரான ரொனால்-டோவுக்கு 5 போட்டிகளில் விளை-யாடுவதற்கு ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. பார்சிலோனா அணியுடனான ஒரு போட்டியில், நடுவரிடம் சிவப்பு அட்டை பெற்ற ரொனால்டோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடுவரை தள்ளினார். இதுகுறித்து நடுவர் கொடுத்த புகார் அடிப்படையில், ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ள ரொனால்டோ, ‘இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் 5 போட்டிகளில் நான் ஆட முடியாமல் இருக்க முடியாது. கால்பந்து கூட்டமைப்பின் இந்தத் தடை எனக்கு வேதனையையும், வருத்தத்தையும், துன்பத்தையும் கொடுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு ஆதரவு அளித்து, உடன் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தடை அறிவிப்பு என்னை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்றார்.