டர்க்மினிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதிவு செய்த நாள் : 25 ஜூலை 2017 08:28

கத்தாரின் தோகாவில் 23 வயது பிரிவுக்கான கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் டர்க்மினிஸ்தான் நாட்டை வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்தில் முதல் கோலை வாங்கிய இந்தியா பிறகு வீறு கொண்டு எழுந்து தொடர்ந்து 3 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. இந்திய அணியில் மன்வீர்சிங் 43வது நிமிடத்திலும், அலன் தியோராய் 72வது நிமிடத்திலும், ஜெரி 76வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் கத்தார், சிரியா அணிகளுக்கு பின்னால் இருக்கும் இந்தியா நாக்அவுட் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறவில்லை.