6 மாதத்­தில் எல்­லாம் சூப்­பர் ஆகி­டுமா?

பதிவு செய்த நாள் : 22 ஜூலை 2017 08:44

புது­டில்லி : 

பிபா நடத்­தும் 17 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான உல­கக்­கோப்பை கால்­பந்து போட்­டி­கள் வரும் அக்­டோ­பர் மாதம் இந்­தி­யா­வில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தப் போட்­டி­யில் இந்­தி­யா­வும் பங்­கேற்­கி­றது. ஏ பிரி­வில் இடம் பெற்­றுள்ள இந்­திய அணி, கால்­பந்து விளை­யாட்­டில் ஆதிக்­கம் செலுத்­தும் கொலம்­பியா, கானா மற்­றும் அமெ­ரிக்­காவை எதிர்த்து விளை­யாட வேண்­டி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வின் 17 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்து அணி­யின் பயிற்­சி­யா­ளர் லூயிஸ் நோர்­டான் டி மடோஸ் பேசும்­போது, ‘நான் இந்த (இந்­திய) அணி­யு­டன் 6 மாதங்­க­ளாக உள்­ளேன். நிறைய உழைத்­துள்­ளேன். 25 போட்­டி­கள் வெளி­நா­டு­க­ளில் விளை­யா­டி­யுள்­ளோம். இது எங்­க­ளுக்கு ஊக்­கம் கொடுக்­கி­றது. கால்­பந்து விளை­யாட்­டில் இந்­தியா நீண்ட வர­லாறை பெற்­றி­ருக்­க­வில்லை. இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில் 6 மாதங்­க­ளில் அணியை தயார் செய்­வது என்­பது சாத்­தி­யம் இல்லை. இதைக் கூறு­வ­தற்கு சங்­க­ட­மாக இருக்­கி­றது.

ஆனால், கள நில­வ­ரத்தை புரிந்து கொள்ள வேண்­டும். 10 ஆண்­டு­கள் அனு­ப­வம் வாய்ந்த அணி­க­ளைத்­தான் நாம் உல­கக் கோப்பை போட்­டி­யில் சந்­திக்­க­வுள்­ளோம். போர்ச்­சுக்­கல், ஸ்பெயின், அமெ­ரிக்கா, தென் அமெ­ரிக்கா நாடு­க­ளில் சிறு­வர்ள் 10 வயது முதல் கால்­பந்­துக்கு தயார் செய்­யப்­ப­டு­வார்­கள். போட்­டி­க­ளல் பங்­கேற்­பார்­கள். இந்த 6 மாதத்­தில் நாம் 25 போட்­டி­க­ளில் விளை­யா­டி­னா­லும், எவ்­வ­ளவு புள்­ளி­கள் பெற்­றுள்­ளோம். பூஜ்­ஜி­யம்­தான். என் அணி­யின் வீரர்­கள் நீண்­ட­தொரு போட்டி அனு­ப­வத்­தைப் பெற்­றிக்­க­வில்லை. பெனால்டி ஷாட்­களை கோல்­க­ளாக மாற்­றும் வாய்ப்பு என் வீரர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. ஆனா­லும் என் அணி­யின் மீது நான் நம்­பிக்கை வைத்­துள்­ளேன்’ என்­றார்.