சென்னை அணியில் டுவைன் கெர்

பதிவு செய்த நாள்

02
செப்டம்பர் 2016
05:38

சென்னை

ஐ.எஸ்.எல்., தொடருக்கான சென்னை கால்பந்து அணியில் ஜமைக்கா கோல்கீப்பர் டுவைன் கெர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்திய கால்பந்து சம்ளேனம் சார்பில் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் கடந்த 2014ம் அண்டு துவங்கியது. தற்போது இந்த தெ £டரின் மூன்றாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை, 2வது இடம் பிடித்த  கோவா, கோல்கட்டா, டில்லி, கேரளா, மும்பை, புனே, நார்த் ஈஸ்ட் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. வழக்கம் போல் இந்த எட்டு அணிகளுக்கு  இடையே முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்த மெகா தொடரின் முதல் அரை இறுதி ஆட்டங்கள் டிசம்பர் 10 மற்றும் 11ம்  தேதிகளிலும், இரண்டாவது அரை இறுதி ஆட்டங்கள் 13 மற்றும் 14ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதி ஆட்டம் டிசம்பர் 18ம் தேதி  நடைபெறுகிறது.

இதற்கான சென்னை அணியில் கரண்ஜித் சிங், பவன் குமார் இருவரும் கோல்கீப்பராக உள்ளனர். இந்நிலையில், ஜமைக்கா கோல்கீப்பர் டுவைன் கெர் (29) கூடுதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜமைக்கா அணிக்காக விளையாடி வரும் இவர், 2015 கேபா அமெரிக் தொடரில் பங்கேற்றுள்ளார். அதோடு 2016 தொடரில் சிலி அணிக்கு எதிரான ‘நட்பு’ போட்டியில் வெற்றி பெற்ற ஜமைக்கா அணியில் இடம்பெற்றிருந்தார். 

இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மேடராசி கூறுகையில், ‘ஐரோப்பிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் டுவைன் கெர். இந்த ஆண்டில் சென்னை அணி கோப்பையை தக்கவைத்துக் கொள்ள இவர் பெரிதும் உதவியாக இருப்பார்’ என்றார்.