உத்தரப் பிரதேச 403 தொகுதிகளில் 172 தொகுதிகளுக்கான பாரதிய ஜனதா கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறைவு

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2022 16:52


லக்னோ, ஜனவரி 14.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் 172 தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை முடிவடைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திற்கும் சராசரியாக 50 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன 172 தொகுதிகள் முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவில்  வருகின்றன இந்த முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு தொகுதிகள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தி முடிவை எட்டியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அப்னா தள், நிஷாத் கட்சி ஆகியவைகளுடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைத்துள்ளது.

அப்னாதள் கட்சியின் சார்பில் அனுப்பிரியா பட்டேல் அசீஸ் பட்டேல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

நிஷாத் கட்சியின் சார்பில் சஞ்சய் நிஷாத் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில துணை முதல்வர் முதல்வர்கள் கேசவ பிரசாத் மௌரியா, தினேஷ் சர்மா ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

மாநில அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் இறுதி செய்யப்பட்ட தொகுதிகள் மற்றும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

பாரதிய ஜனதாக் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொதுப்பணித்துறை அமைச்சர் நிதின் கட்காரி கட்சியின் தேசிய தலைவர் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தவிர மற்ற இருவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் தனித்து இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

பிரதமரின் வாரணாசி தொகுதியில் உள்ள அயோத்தியா சட்டமன்றத் தொகுதியில் யோகி ஆதித்யாநாத் போட்டியிடுவார் மாநில துணை முதல்வர் மவுரியா சிரத்து தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் மற்றொரு துணை முதல்வரான தினேஷ் ஷர்மா லக்னோ தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான சுதந்திர தேவ் சிங் போட்டி இடுகிறார். அவர் போட்டியிடும் தொகுதி குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை.