கேரள முதலமைச்சர் விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2022 16:10

 கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட ஜனவரி 14ந்தேதி  உள்ளூர் விடுமுறை அறிவிக்கக் கோரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு  இன்று (13-1-2022) தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.  

அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

‘தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின்
6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14 ஆம் தேதி, புனிதமான "தை" தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும்  கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’