அரசுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை பங்குத் தொகையாக மாற்ற வோடபோன் ஐடியா நிறுவனம் ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2022 15:19

மும்பை, ஜனவரி 11,

அலைக்கற்றை வரிசை கட்டணம் மற்றும் ஈடு செய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பாக உச்சநீதிமன்ற ஆணைப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ 16,000 கோடி பங்குத் தொகையாக மாற்ற வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் ஃபோர்டு திங்கட்கிழமையன்று முடிவு செய்தது.

மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்த கடிதம் ஒன்றில் இந்த முடிவு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுக்கு தரவேண்டிய பாக்கியை செலுத்துவதற்கு பல திட்டங்களை தொலை தகவல் தொடர்பு இலாகா 14.8.2021ஆம் தேதி தெரிவித்தது.

தொலைத் தகவல் தொடர்பு இலாகா முன்வைத்த சமரச திட்டங்களில் ஒன்றை ஏற்று அமல் செய்ய 90 நாட்கள் அவகாசம் தரப்பட்டது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் விலை அவற்றின் முக மதிப்பை விட இப்பொழுது பங்கு சந்தையில் குறைந்து விட்டது ஆனால் முக மதிப்புக்கு ஈடாக ஒரு பங்கு 10 ரூபாய் என்ற விலையில் அரசுக்கு வழங்க வோடபோன் ஐடியா நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்தக் கணக்கின்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த பங்குகளில் உற்பத்தி 35.8% அரசு பங்கு ஆக மாற்றப்படும்.

இந்தப் பங்கு மாற்றத்திற்கு ஏற்ப கம்பெனியில் நிர்வாகத்தில் மாற்றங்களை செய்வதற்கு கம்பெனியில் அமைப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யவும் தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் முன்வைத்துள்ள இந்த சமரசத் திட்டத்தை தொலைத்தகவல் தொடர்பு இலாகா என்பதைப் பொறுத்து தான் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்றும் பங்குச்சந்தைக்கு தெரிவித்த கடிதத்தில் வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது.