400 கோடி டாலர் கடன் பத்திரம் மூலம் திரட்டியது ரிலையன்ஸ்

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2022 13:47

ஹாங்காங், ஜனவரி 6,

வெளிநாட்டு ஆங்கிலப் பத்திரிகையான ராய்ட்டர் வட்டாரங்களில் இருந்து தனக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் 400 கோடி டாலர் கடன் திரட்டி இருப்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளது

இந்த 400 கோடி டாலர் கடன் பத்திரங்களும் 10 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் என 3 தொகுப்புகளில் நிறைவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டு கடன் பத்திரங்கள் மூலம் 150 கோடி டாலரும்.

30 ஆண்டு கடன் பத்திரங்கள் மூலம் 175 கோடி டாலரும்

40 ஆண்டு கடன் பத்திரங்கள் மூலம் 25 கோடி டாலரும் ரிலையன்ஸ் நிறுவனம் திரட்டி உள்ளது.

இந்த 400 கோடி டாலரில் 150 கோடி டாலர் தொகையை ஏற்கனவே வாங்கிய கடனை செலுத்த ரிலையன்ஸ் நிறுவனம் பயன்படுத்தும் என்று தெரிகிறது.

இந்த டாலர் கடன் பத்திரங்கள் குறித்து விபரம் அறிய ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளமுயன்ற பொழுது எந்த பதிலும் கிடைக்கவில்லை.