தமிழ்நாடு போலீஸ் ஹாக்கி அணிக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

பதிவு செய்த நாள் : 30 டிசம்பர் 2021 20:29

சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் 70வது அனைத்து இந்திய காவல் ஹாக்கி சாம்பியன் போட்டியில் 3ம் இடம் பிடித்த தமிழ்நாடு காவல் ஹாக்கி அணி வீரர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த 2.12.2021 முதல் 11.12.2021 வரையில், கர்நாடக மாநிலத்தில் 70வது அனைத்து இந்திய காவல் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2021 போட்டி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காவல்துறை ஹாக்கி அணியினர் கலந்து கொண்டு 3ம் இடத்தை பிடித்தனர்.

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் கலந்து கொண்ட 24 அணிகளில் 3ம் இடம் பிடித்த தமிழ்நாடு காவல் ஹாக்கி அணி வீரர்களை கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று (30.12.2021) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.