சபரிமலை மண்டல பூஜை, மகர பூஜைக்கு செல்வதற்கு சொகுசு பேருந்துகள்

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2021 11:14

சென்னை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர பூஜைக்காக செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக 64 சிறப்பு மிதவை சொகுசு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இருமுடி சுமந்து சென்று நெய் அபிஷேகம் செய்து சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு, தியான நிலையில் இருக்கும் ஐயப்பனை கண் குளிர தரிசனம் செய்து வழிபடுபார்கள் பக்தர்கள்.

கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கடந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

நடப்பாண்டு தினசரி 30,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்காக, சென்னை, மதுரை திருச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.