பொருளாதார ரீதியில் நலிந்தவருக்கான இட ஒதுக்கீட்டு வருமான வரம்பு உயரக்கூடும்

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 18:54

புதுடெல்லி, நவம்பர் 25,

பொருளாதார ரீதியில் நலிந்தவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பு ரூபாய் 8 இலட்சத்திலிருந்து உயரக் கூடும்.

ரூ. 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பு குறித்து மறு பரிசீலனை செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இப் பரிசீலனைக்கு என ஒரு கமிட்டி நியமிக்கப்படும் அந்தக் கமிட்டி நான்கு வார காலத்தில் தனது முடிவை அரசுக்கு சமர்ப்பிக்கும். பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து இந்த நடவடிக்கை துவக்கப்படும். அதனால் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் கவுன்சலிங் ஒத்தி வைக்கப்படும் என்றும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

இந்தப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் பரிசீலனையில் இப்பொழுது உள்ளது.

அக்டோபர் மாதம் 26ம் தேதி பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கான வருமான வரம்பு ரூபாய் 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதற்கு என்ன காரணம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா. அரசியல் சட்ட விதி 14, 15, 16 ஆகியவற்றின் கீழ் இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினருக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.