டெல்லியில் மீண்டும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 18:08

புதுடெல்லி. நவம்பர் 25.

டெல்லியில் காற்று மாசு மீண்டும் மோசமடைந்தது தொடர்ந்து இந்திய தலைநகரப் பகுதியில் கட்டுமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வியாழனன்று மீண்டும் தடை விதித்தது.

கட்டுமானத் தொழிலுக்கு தடை விதிப்பதால் வேலை இழக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் சேஸ் நிதியிலிருந்து குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படியான சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தலைமை நீதிபதி என். வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

புதிய தலைநகர் பகுதியில் உள்ள காற்று மாசு குறித்து சரித்திர பூர்வமான அணுகுமுறைகளுடன் அறிவியல் அடிப்படையிலான புள்ளிவிவரங்களுடன் ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளும்படி தலைநகர காற்று மாசு நிர்வாக கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இந்தியத் தலைநகரைச் சுற்றியுள்ள மாநிலங்களான உத்திரபிரதேசம் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.