திரிபுராவுக்கு புறநிலை ராணுவத்தை அனுப்ப உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணை

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 16:27

புதுடெல்லி, நவம்பர் 25,

திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை இன்று அமைதியாக நடத்த உதவுவதற்காக இரண்டு கம்பெனி ஒரு நிலை ராணுவப் படைகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

புறநிலை இராணுவவீரர்கள் வாக்குச்சாவடிகளில் அமைதியை காப்பதற்காக நிறுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் திரிபுரா மாநில காவல்துறைத் தலைவருக்கும் திரிபுரா மாநில உள்துறை செயலாளருக்கும் திரிபுராவில் வியாழன் அன்று நடைபெறும் தேர்தலின்போது நிலைமை எப்படி உள்ளது என்பதை மதிப்பீடு செய்து கூடுதல் படைவீரர்கள் தேவையா என்று முடிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகும்படி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

திரிபுராவில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த 770 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன வாக்குப்பதிவு நடைபெறும் இந்த 770 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வாக்குச்சாவடிகளை பார்வையிடவும். வாக்குப்பதிவு முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் அனுமதி வழங்கும் படியும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்துக்கு தவறான தகவல் தந்து மாநில அரசு மீது தவறான அபிப்ராயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் அரசியல் கட்சிகள் அணுக வேண்டிய இடம் தேர்தல் கமிஷன் தானே தவிர உச்சநீதிமன்றம் அல்ல என்று திரிபுரா மாநில அரசின் சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி கூறினார்.

இன்று தேர்தல்கள் நடைபெறுகின்றன இந்தத் தேர்தல்களை உடைய முறையாக நடைபெற உதவும் அதைத்தவிர நீதிமன்றம் எந்த வகையிலும் குறுக்கிட முடியாது அதனால் இன்று அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை அணுகி அதற்கு வேறு எந்த நோக்கமும் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர் தெரியாமல் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற தகுந்த ஆணை பிறப்பிக்கும் படி கோரி மனு செய்தன.