மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை உயர்வு: ஐந்தாவது தேசிய கணக்கெடுப்பில் முடிவு

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 15:47

புது டில்லி, நவம்பர் 25,

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 1992ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது 2016ஆம் ஆண்டில் நான்காவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன அப்பொழுது 1000 ஆண்களுக்கு  919 பெண்கள் மட்டுமே இருந்தனர்.  இந்த எண்ணிக்கை பொழுது 929 ஆக உயர்ந்துள்ளது.

பல மாநிலங்கள். யூனியன் பிரதேசங்களில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களும் உள்ளன. அவற்றின் விவரம்: குஜராத் மகாராஷ்டிரம் அருணாசலப் பிரதேசம் ஹரியானா மத்தியப் பிரதேசம் பஞ்சாப்.

 யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர். சண்டிகார். டெல்லி .அந்தமான் நிக்கோபார் தீவுகள். மற்றும் நாகர் ஹவேலி. லடாக் ஆகியவை ஆகும்.

இந்த மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் ஒப்பு நோக்கி அந்த எண்ணிக்கை உயர்ந்து இருப்பது தெரியவரும்.

மாநில அளவில் இறப்பு விகிதங்கள் திரட்டப்பட்டு தேசிய சராசரி வகுக்கப்பட்டுள்ளது எந்த அடிப்படையில் பார்க்கும் பார்க்கும் பொழுது அகில இந்திய அளவில் பிறப்பு விகிதம் 2க்கு குறைவாக இந்தியாவில் உள்ளது. 2.1 குறைவாக பிறப்பு விகிதம் இருந்தால் குழந்தை பெறக்கூடிய வயது உள்ள தாய் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக பெற்றுக் கொள்கிறார் என்று பொருள்.

குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தால் மக்கள் தொகை வருங்காலத்தில் உயராது. இறப்பு எண்ணிக்கைக்கும் பிறப்பு எண்ணிக்கைக்கும் இடையே சம நிலை ஏற்படும்.

இந்த சமநிலை ஏற்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம்.

2 என்ற எண்ணிக்கைக்கு மேல் பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்கள் ஆறு மட்டுமே இந்தியாவில் உள்ளன பீகார் விவசாயம் மணிப்பூர் ஜார்கண்ட் உத்தரப் பிரதேசம் ஆகியவை அந்த ஆறு மாநிலங்கள்.

பீகார் மாநிலத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை மூன்று ஆகும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மூன்று என்ற எண்ணிக்கையில் அதிகம்தான் ஆனால் பீகார் மாநிலத்தில் கடந்த காலத்தில் பிறப்பு எண்ணிக்கை 3.4 ஆக இருந்தது இந்த எண்ணிக்கை இப்பொழுது 3 ஆக குறைந்திருக்கிறது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது

தமிழ்நாடு

தமிழகத்தில் 2015 -16 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் 1.7 ஆக இருந்தது. 2021-22ல் 1.8 ஆக உயர்ந்துள்ளது.

2015 -16 ஆம் ஆண்டில் ஆண் பெண் சராசரி 1000 ஆண்-1033 பெண் என்ற விகிதத்திலும்

2021-22 ஆம் ஆண்டில் ஆண் பெண் சராசரி 1000 ஆண்-1088 பெண் என்ற விகிதத்திலும் உயர்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கின்படி உலகில் மிகவும் கூடுதலான மக்கள்தொகை உள்ள நாடாக இந்தியா அமைகிறது 2040 முதல் 2050 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை 160 முதல் 180 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2022ம்ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவின் மக்கள்தொகையை தாண்டிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

ஆனால் 2021 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியாவின் மக்கள்தொகை 2033ம் ஆண்டில் எட்டும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.