வோட ஃபோன் மொபைல் கட்டணம் 25 சதவீதம் உயர்வு

பதிவு செய்த நாள் : 23 நவம்பர் 2021 14:31

புதுடில்லி, நவம்பர் 23,

வோடஃபோன் நிறுவனம் தன்னுடைய பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு அடிப்படையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் வியாழக்கிழமை நவம்பர் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடஃபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய பிரிபெய்டு கட்டண பட்டியல் விவரம்:

இந்த கட்டண விவர பட்டியல் படி இருபத்தி எட்டு நாட்களுக்கான 79 ரூபாய் திட்டம் 99 ரூபாய் திட்டமாக உயர்த்தப்பட்டுள்ளது.

365 நாட்களுக்கான மொபைல் மற்றும் டேட்டா கட்டணம் ரூ. 2358லிருந்து 2899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இருபத்தி எட்டு நாட்களுக்கான அடிப்படை டேட்டா கட்டணம் ரூ.48ல் இருந்து ரூ.58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

56 நாட்களுக்கான டேட்டா டாரீப் கட்டணம் ரூ351லிருந்து ரூ.418 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பாரதி ஏர்டெல் நேற்று 20 முதல் 25 சதவீதம் கட்டணங்களை உயர்த்தியது குறிப்பிடத் தக்கது