சூடான் பிரதமர் மீண்டும் ராணுவத்தால் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்

பதிவு செய்த நாள் : 22 நவம்பர் 2021 16:05

கார்ட்டூம், நவம்பர் 22,

சூடான் இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டு பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிரதமர் ஹம்டோக் வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்தப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் சூடானில் ராணுவப் புரட்சி நடந்தது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஹம்டோக் கைது செய்யப்பட்டார்.

ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாக எழுதி கையெழுத்து போட ஹம்டோக் மறுத்துவிட்டார்.

ராணுவ புரட்சிக்கு எதிராக சூடான் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

உலக நாடுகளும் ஆட்சிக்கவிழ்ப்பு கண்டித்தனர்.

அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் ராணுவ தலைவர்களுடன் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்சியில் அமர்த்தும் வழி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ராணுவத்துடன் சேர்ந்து சில அமைப்புக்கள் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

அந்த அமைப்புக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாகவும் புரட்சியை சூடான் பிரதமர் விலைக்கு விற்றுவிட்டார் என்றும் சாட்டியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சூடான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது அதற்குப் பிறகு இதுவரை சூடான் நாட்டு இளைஞர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் ரத்தம் சிந்துவதை தவிர்ப்பதற்காக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முன்வந்ததாக ஹம்டோக் தெரிவித்தார்.

தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட ஒரு ஆட்சிமன்ற கவுன்சிலை பிரதமர் அமைத்து அதன்மூலம் சூடானில் ஆட்சி நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள். பெண்களுக்கான உரிமைகள் விரைவில் மீண்டும் அவன் தொட வேண்டும் என்று அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளன.