சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் தலைமை பூசாரியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு

பதிவு செய்த நாள் : 18 அக்டோபர் 2021 13:00

சபரிமலை, அக்டோபர்18,

சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் தலைமை பூஜாரியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 16ஆம் தேதி முதல் ஆண்டு மண்டல பூஜை துவங்கும் பொழுது பரமேஸ்வரன் பதவியேற்பார் அதுமுதல் நூறாண்டு காலம் அவர் பதவியில் இருப்பார்.

சபரிமலை தலைமை பூசாரி தேர்வு செய்வதற்கான முதல் சுற்று நேர்முகத் தேர்வு நடந்தது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர்கள் எல்லாம் எழுதி குலுக்கல் முறையில் ஒருவரை தலைமை பூஜாரியாக தேர்வு செய்தனர்.

திருவிதாங்கூர் தேவஸ்தான அலுவலகத்தில் குலுக்கல் முறை தேர்வு நடந்தது.

பந்தளம் ராஜ குடும்பத்தின் இளைய வாரிசு கோவிந்த் வர்மா தலைமைப் பூசாரியை தேர்வு செய்வதற்கான சீட்டை எடுத்தார்.

இதே முறையில் மாலிகாபுரம் கோயில் தலைமை பூசாரியும் தேர்வு செய்யப்பட்டார். தேவி கோயில் தலைமை பூசாரியாக தேர்வு செய்யப்பட்ட அவர் பெயர் ஷம்பு நம்பூதிரி.