பங்களாதேஷில் துர்க்கை பூஜையின்போது இந்து கோவில்கள் மீது தாக்குதல், 3 பேர் பலி

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 16:07

டாக்கா, அக்டோபர் 14,

பங்களாதேஷில் உள்ள இந்துக் கோயில்களில் துர்க்கை பூஜை கொண்டாடப்படும் பொழுது கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இந்தத் தாக்குதல்களின் போது 3 பேர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பங்களாதேஷில் உள்ள 22 மாவட்டங்களில் எல்லைக் காவல்படை காவலுக்கு நிருத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது க்யுமில்லா என்ற நகரம் அங்குள்ள இந்து கோவில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர் இறுதியில் எல்லைக் காவல் படை அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

ஹாஜிகஞ்ச், பன்ஸ்காளி, காக்ஸ் பஜாரில் உள்ள பெகுவா ஆகிய நகரங்களில் இந்து கோவில்களில் தாக்குதல் நடைபெற்றது.

கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற உள்ளூர் போலீசாரும் தாக்கப்பட்டனர்.

வன்முறைச் சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டது வன்முறைச் சம்பவங்களில் பலரும் காயமடைந்ததாகவும் அந்தப் பத்திரிகை கூறுகிறது 

இறுதியில் பங்களாதேஷ் அதிரடிப்படை, எல்லைக் காவல்படை ஆகியவை அமைதியை ஏற்படுத்த இந்துக் கோயில்களில் உள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களின்போது இதுவரை 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரம் ஆரம்பிக்க காரணமாக இருந்தது சமூக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு விடியோ. இந்து கடவுள்களை அவமதிக்கும் அந்த வீடியோவை வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.