நார்வே நாட்டில் வில் அம்புகளால் 5 பேரைக் கொன்றவர் கைது

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 15:37

ஸ்டாக் ஹோம், அக்டோபர் 14,

நார்வே நாட்டின் நகருக்கு அருகில் உள்ள கோன்ஸ்பெர்க்  (Kongsberg) என்ற நகரில் அம்புகளால் ஐந்து பேரை கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது ஒரு சிறு கை கலப்பு இடம்பெற்றது. ஆனால் நார்வே நாட்டு போலீசார் 5 பேரை கொன்ற கொலையாளியை வெற்றிகரமாக கைது செய்தனர்.

கை கலப்பின்போது யாரும் காயம் அடைந்தார்களா என்று செய்தியாளர்கள் கேட்டார்கள் அதற்கு பதில் எதுவும் விளக்கமாக போலீஸ் தரப்பில் தரப்படவில்லை.

உயிர் இழந்த அந்த ஐந்து பேரைத் தவிர 2 பேர் அம்புகளால் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அந்த இருவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று போலீசார் கூறினார்கள்.

காயமடைந்த ஒருவர் போலீஸ் அதிகாரி அவர் விடுப்பில் இருந்தபோது சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருள்களை வாங்க வந்திருந்தார் அவரும் அம்புகளால் காயமடைந்தார்.

அம்பு எய்து 5 பேரைக் கொன்ற பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைகளை அவர் மட்டுமே செய்ததாகவும் வேறு யாரும் அவருக்கு உதவவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நார்வே நாட்டின் தற்காலிக பிரதமராக எர்னா சோல்பெர்க் என்பவர் பணிபுரிகிறார் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் குரூரமானது  என்று குறிப்பிட்டார்.

பிரதமராக வியாழனன்று பதவியேற்கவுள்ள ஜோனாஸ் கார் ஸ்டோயர். ஐந்து பேரை கொன்ற சம்பவம் மிருகத்தனமானது என்று குறிப்பிட்டார்.