நோக்கியா, பாக்ஸ்கான் உள்ளிட்ட 37 நிறுவனங்களில் உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் :மத்திய அரசு அனுமதி

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 15:06

புதுடெல்லி, அக்டோபர் 14,

நோக்கியா, பாக்ஸ்கான் (Nokia, Foxconn) உள்ளிட்ட 37 நிறுவனங்களில் உற்பத்தி ஒருங்கிணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொலைத்தகவல் தொடர்புத் துறையில் உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக உற்பத்தியோடு இணைந்து ஊக்குவிப்பு சட்டத்தை அமல் செய்வதாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொலைத்தகவல் தொடர்புத் துறை அறிவித்தது 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை அமல் செய்வதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ 12195 கோடியாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்பொழுது உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை ரூ3345 கோடியை 31 திட்டங்களில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களில் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

திட்டங்கள் முதலீடு 30 நிறுவனங்களில் அமல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த நான்கரை ஆண்டுகளில் 3345 கோடி முதலீடு செய்யப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்தத் திட்டங்களை அமல் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் வருமாறு: நோக்கியா, இந்தியா எச்.எப்.சி.எல், டிக்சன் டெக்னாலஜிஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ் கான், கோரல் டெலிகாம். விவிடி என் டெக்னாலஜிஸ், ஆகாஷ்அஸ்தா டெக்னாலஜிஸ் மற்றும் ஜிஎஸ் இந்தியா.முதலீட்டுக்கான உற்பத்தியில் 20 மடங்கு விற்பனை வரை இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.

தொலைத்தகவல் தொடர்புத் துறையில் உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களும் பங்கு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் பங்களிப்பு தொலைத்தொடர்புத் துறையில் தான் முதல் முதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.